வெங்காயம் பயன்கள்

வெங்காயம் பயன்கள்

வெங்காயம் பயன்கள்

📍ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் ஆதார பொருளாக இருப்பது வெங்காயம் மட்டுமே. பல உணவுகளில் இதை வதக்கி தாளித்து பயன்படுத்துவார்கள், சில உணவுகளில் இதை பச்சையாகவே சாலட்டாக சாப்பிடுவார்கள். வெங்காயம் நாம் சமைக்கும் உணவின் சுவையை கூட்டுவது மட்டும் அல்லாமல் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளன. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டங்கள் அதிக அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகியவை அதிகம் நிறைந்து காணப்படுகின்றன.

வெங்காயத்தின் பயன்கள்
🧄வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே  கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
🧄 சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்
🧄வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம்  சேர்ப்பது அவசியம்.
🧄சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டும்.
🧄காய்ச்சல், சிறுநீரக கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து இரசமாக வைத்து அருந்தினால் குணமாகும்.
🧄புகை பிடிப்பவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறு நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

🧄வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

🧄வெட்டு காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

🧄பற்களில் பாக்டீரியாக்கள் தங்கிவிடாமல் இருக்க தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை  சாப்பிட்டு வந்தால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.

🧄இரத்த மூலம் போன்ற கடுமையான மூல நோய்களும் குணமாக 50 கிராம் வெங்காயத்தை சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறை தினமும் இரண்டு வேளை என்று பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.

🧄தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.

🧄வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து  வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம்  மறையும்.
🧄வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்  தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
🧄புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து  விடுகிறது.
வெங்காயம் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்