வீதியின் பெயர் மாற்றப்பட்டது

எம்பிலிப்பிட்டியவில் டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என இருந்த வீதியை முன்பு இருந்தது போல கொங்கிரீட் யாட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தாயாரான டோன தண்டின சமரசிங்கவின் 41வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது அவரது நினைவாக 2011 இல் கார்ப்பெட் செய்து டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என பெயர் மாற்றப்பட்டது.

தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் இடம்பெறும் நிலையில் இந்த வீதியின் பெயர் வழமை போல கொங்கிரீட் யாட் வீதியாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.