வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றி: 3 பேர் வைத்தியசாலையில்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம விஜய ரஜதஹன பகுதியில் காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட 3 பேரை தாக்கியதுடன் அருகில் இருந்த காரையும் சேதப்படுத்தியுள்ளது.

மேலும், காயமடைந்த ஒருவர் மீரிகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய இருவரும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்