Last updated on January 9th, 2025 at 10:29 am

வீட்டினை எரித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது | Minnal 24 News %

வீட்டினை எரித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் 2022.08.30 அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து,  தீயிட்டு எரித்து விட்டு தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு கிளிநொச்சி பொலிஸார் வலைவீசி வந்தனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் – 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தை நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்