விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

💢சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. காலப்போக்கில் இறையுணர்வின் மீது இருந்த ஈடுபாட்டால் அவரது பெயரினை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.

கல்வி

💢விவேகானந்தரின் தாய் மொழி வங்காளம், இளம் வயதிலேயே தியானம் பழகினார். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். மிகுந்த பகுத்தறிவாளராகவும் திகழ்ந்த இவர் இசை மற்றும் தியானத்தில் ஆற்றல் கொண்டவராக விளங்கினார்.1879-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கொல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் விவேகானந்தர் சேர்ந்தார்.

💢ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அந்த சமயத்தில் அனைத்து மேற்கத்திய தத்துவங்களையும் அவர் முழுவதுமாகப் படித்தார். மேலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு ஆகியவற்றினையும் முழுமையாக அறிந்துகொண்டார்.

உயர்கல்வியும் ஆன்மீக ஈடுபாடும்

💢சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1879ல் மெட்ரிக் பள்ளிப் படிப்பினை முடித்து கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

💢கடவுள் இருப்பது பற்றியான சந்தேகங்கள் அவர் மனதில் எழத் தொடங்கின. இதுவே அவரை கேசவ்ஒப் சந்திராஸ் தலைமையிலான முக்கிய மத இயக்கமான பிரம்ம சமாஜாவில் இணைய வைத்தது.

💢இந்நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரியவந்தது. இவர் ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு இரட்டைத் தன்மை இல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.

துறவியான விவேகானந்தர்

💢விவேகானந்தர் தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் மற்றும் சில முதன்மை சீடர்களும் துறவிகளாக மாறினார் . துறவியாக மாறிய இவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று அங்கு தங்களது ஞான அறிவினை விசாலப்படுத்தி கொண்டனர். அப்போது இந்திய மக்களின் நிலையினை பற்றி விவேகானந்தர் நன்கு புரிந்துகொண்டார்.

💢நாடு முழுவதும் வெவ்வேறு மக்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்ட விவேகானந்தர் மக்கள் ஆங்கிலேயே அரசிடம் அடிமைப்பட்டு இருப்பதனை நினைத்து வருந்தினார். மேலும் அவர் அதற்கு அடுத்து நடத்திய சொற்பொழிவுகள் மக்களின் முன்னேற்றத்திற்கான சொற்பொழிவுகளாகவே இருந்தது.

சிகாகோ உலக மாநாட்டில் சொற்பொழிவு

💢இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதிக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.

💢விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டார்.

💢இங்கு விவேகானந்தர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினர். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களைப் போதித்து வந்தார்.

இந்தியாவில் விவேகானந்தா மடம் மற்றும் மிஷன்

💢பல நாடுகளில் தனது ஆன்மீக பயணத்தினை மேற்கொண்ட விவேகானந்தர் மீண்டும் இந்தியா வந்து நாடு முழுவதும் தனது மடங்களின் மூலம் சொற்பொபிழிவு மற்றும் தனது விலைமதிப்பில்லா கருத்துக்களை கூறி மக்களின் வாழ்வு மேம்பாட்டு இருக்க தனது உதவினை மக்களுக்கு புரிந்தார்.

இறப்பு

💢மேலை நாடுகளுக்குச் சென்று பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் கல்கத்தா அருகில் வேலூரில் அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஜூலை 4 1902 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் இறந்தார்.

முடிவுரை

💢சுவாமி விவேகானந்தர் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் இவரின் அளப்பெரும் பணிகள் என்றென்றும் போற்றுதற்குரியதாகும்.

💢இதனாலேயே இன்றும் அவரது பெருமையை உலகம் பாரட்டுகிறது. இந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்குத் துணிவை தரும்.

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்