விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய கார்

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை கார் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிலசாந்த் ( வயது 05 ) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தனது கிராமத்தில் உள்ள கோயில் முன்பாக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது குறித்த சிறுவன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதால் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மோதிய கார் நிற்காமல் சென்றதால் மத்தூர் காவல்துறையினர் விரட்டி சென்று வெள்ளை குட்டை என்னும் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை மடக்கி பிடித்து சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்