விபத்துக்குள்ளான ரயில்:இடைநிறுத்தப்பட்ட இயந்திர இயக்குநர்

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான ரயில் இயந்திர இயக்குநர், விசாரணைகள் நிறைவடையும் வரை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ரயில் பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே இதனைத் அறிவித்துள்ளார்.

சிலாபம் நோக்கிப் புறப்படுவதற்காக நேற்று பிற்பகல் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு பிரவேசித்த ரயில் முதலாவது மேடையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்