விபத்தில் உயிரிழந்த மாட்டை இறைச்சிக்காக கொண்டு சென்றவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியினால் மடக்கி பிடிப்பு

-தம்பிலுவில் நிருபர்-

 

அம்பாறை – தம்பிலுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்த மூன்று மாடுகளை, இறைச்சிக்காக உழவு இயந்திரம் ஒன்றில் கொண்டு செல்ல முயன்றபோது, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி P. மோகனகாந்தன் தலைமையிலான குழுவினர் திருக்கோவில் பொலிஸாரின் உதவியுடன்  மாடுகளை மீட்டனர்.

பின்னர் உயிரிழந்த மாடுகளை திருக்கோவில் பிரதேச சபையின் உதவியுடன் அடக்கம் செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மேலும், மாடுகளை கொண்டு சென்ற நபர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் எச்சரிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்