விஜய்யின் “தி கோட்” திரைப்படத்தின் புதிய தகவல்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ .
இந்த படத்தில் நடிகர்களான பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானதுடன், இரசிகர்கள் மத்தியில் அதற்கு அமோக வரவேற்புக் கிடைக்கப்பெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய தகவல் ஒன்று இன்று மதியம் 01.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்