வாய் புற்றுநோய் அறிகுறிகள்

வாய் புற்றுநோய் அறிகுறிகள்

வாய் புற்றுநோய் அறிகுறிகள்

🔴வாய் புற்றுநோய் என்பது வாயில் உள்ள நாக்கு, உதடு, வாயின் கீழ் தளம், தொண்டை போன்ற இடங்களில் வரும் கட்டி அல்லது புண்கள் தான் வாய் புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்களை அலட்சியமாக விடாமல் ஆரம்ப நிலையிலே கவனித்து வருவது மிகவும் அவசியம். இந்த நோயினால் பல உயிர்கள் இறந்து இருகிறது. இந்த வாய் புற்று நோயானது வாய் பகுதி மட்டுமல்லாமல் தலை பகுதிகளிலும் பாதிப்பு அடைய செய்கிறது. இதுவே வாய் புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது.

🔴வாயில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, சிகரெட், பீடி போன்ற போதை பொருட்களை வாயில் அடக்குவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அத்துடன் பல் துலக்குவதில் கவனமாக இல்லாமல் இருப்பதுஇ வாய் பகுதிகளை ஒழுங்காக தூய்மை செய்யாமல் இருப்பது போன்றவற்றாலும் இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

வாய் புற்றுநோய் அறிகுறிகள்

👄திடீரென்று காரணமின்றி உங்கள் நாக்கு அல்லது வாயின் ஏதேனும் ஒரு பகுதி மரத்துப் போவதை உணர்ந்தால்இ அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்றும் உணரக்கூடும். அதோடு காரணமின்றி ஒன்றிற்கு மேற்பட்ட பற்கள் வலுவிழந்து ஆட்டம் காட்டுவதோடுஇ விழவும் செய்யும். இப்படி நடந்தால் வாய் புற்றுநோய்க்குரிய அறிகுறியாகும்.

👄உங்களால் உணவை அல்லது நீரை விழுங்க முடியவில்லையா? மிகுந்த வலியுடன்இ சிரமத்தை உணர்கிறீர்களா? உணவை மெல்ல கூட முடியவில்லையாஈ அப்படியானால் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் தொண்டையில் இப்படியான அசௌகரியமானது 6 வாரத்திற்கும் மேலாக நீடித்திருந்தால்இ சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

👄வாயில் புற்றுநோய் பொதுவாக முதிர்ந்த நிலைகளிலில் வரும் என்றும் சொல்லப்படுகிறது. வாய்களில் வலிகள் போன்ற எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவர் அல்லது பொது மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

👄வாயில் இரத்த கசிவு, பல் ஆடுதல், தேவையில்லாமல் பல் கொட்டுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதற்கான முக்கிய பிரச்சனையாகும்.

👄வாய் பகுதியில் வெள்ளை நிறம் அல்லது இளம்சிவப்பு போன்ற நிறங்கள் மூன்று வாரத்திற்கு மேல் இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

👄அதேபோல் வாய் பகுதில் கட்டி மற்றும் தடித்து இருந்தால் வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகவும் இருக்கிறது. மேலும் கழுத்து உள்பகுதியில் கட்டிகள் போன்றவை இருந்தாலும் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

👄தொண்டை பகுதில் தொடர்ந்து வலி இருந்தாலும் வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

👄மேலும் பேசுவதில் சிரமம் மற்றும் பேசுவதில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டாலும் வாய் புற்றுந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். இது போன்ற அறிகுறிகள் தென்பாட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

வாய் புற்றுநோய் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்