வாகன விபத்து: 8 பேர் காயம்

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு – ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில்,  சூடாமணி கிராமம் அருகே மாணவிகளை இறக்கிவிடுவதற்காக கல்லூரி பேருந்தை சாரதி நிறுத்தியுள்ளார்.

இதனை எதிர்பாராத அரசுப் பேருந்து சாரதி, கல்லூரி பேருந்தின் பின்னால் மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. 8  பேர் காயமடைந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்