வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பாரவூர்தியின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்