வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியதில் கார் சாரதி உயிரிழந்தார்.
திருச்செங்கோட்டை சேர்ந்த சதீஷ் என்பவரே உயிரிழந்தார்.
குறித்த நபர் பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றபோது, கேரளாவில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த லொறியின் பின்சக்கரத்தில் அதிவேகமாக மோதியதில் கார் நசுங்கி படுகாயமடைந்த சாரதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் பின்சக்கரங்கள் தனியாக கழன்று லொறி கவிழ்ந்ததில் லொறி சாரதிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்