வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

 

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றையதினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர்மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்