வறுமையின் உச்சம் : நாள் முழுவதும் உழைத்தாலும் 180 ரூபா தான் ஊதியம்!

உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு காணப்படுகின்றது, புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு.

இந்நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

உலகின் ஏழை நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது.

பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டன. இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, ​​பொருளாதார நிலை நன்றாக இருந்தது, ஆனால் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.

புருண்டியில் 1996 முதல் 2005 வரை நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது.

அதோடு அந்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மெல்ல மெல்ல இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.

புருண்டியைத் தவிர, மடகாஸ்கர், சோமாலியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் போராடி வருகின்றன.

ரூஹி சென்னட் என்ற யூடியூப் சனல் வெளிட்டுள்ள தகவலின் படி, இந்நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டொலர்கள், அதாவது ஆண்டுக்கு (இலங்கை ரூபாயில்) 54 ஆயிரம் ரூபாய் தான்.

இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல், நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் (இலங்கை ரூபாயில்) 180 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது.

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள பல ஏழை நாடுகளின் முன்னேறத்திற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்த போதிலும், புருண்டி உட்பட உலகின் பல நாடுகளில் நிலைமை முன்னேற்றமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்