வருடாந்த பட்டமளிப்பு விழா
ஆறு வருட காலங்களாக கல்விச் சேவையில் பல வாய்ப்புகளை வழங்கி வரும் லேடி லய்ப்(f) இன்ஸ்டிடியூட் என்ட்(d) ஸ்கில்ஸ் நிறுவனத்தில் கல்வி கற்ற டிப்ளோமோ மாணவர்களுக்கான பட்டமளிப்பு, சாதனையாளர்கள் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் விழா என்பன அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அதன் பணிப்பாளர் சமீரா ரஸாக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக, டெலன்ட் ஹப்(b) நிறுவனத்தின் பணிப்பாளர்.பஸ்லியா ரமீஸ், வைத்தியர் தரன்கினி, ஆர்.அஸ்வினாஷ் மற்றும் சமூக சேவையாளர் செல்வி. நுஹா ரிஸான் ஆகியோர் கலந்து கொண்டதுடன், இன்னும் பல அதிதிகள், மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், துறை சார்ந்தவர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்