வயலில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

தொம்பே – மல்வான, மாயிவல பகுதியில் உள்ள வயல் ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரம்பொடை, நாவலதென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வயலில் 2 சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இருவரும் கடந்த 22ஆம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் விடுதிக்குத் திரும்பியிருக்கவில்லை என குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒருவரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்