வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது

கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேககநபர்கள் இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்