வண்ணையம்பதி ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் சங்காபிஷேகம்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் சங்காபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம் பெற்றது.

பிரதான யாகசாலை அமைக்கப்பட்டு அதில் பூர்ணகும்பத்துடனான 1008 சங்குகள் வைக்கப்பட்டு கிரிகையைகள் இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள், சீதேவி, மஹாலட்சுமி, ஸ்ரீ இரங்கநாதர் உள்ளிட்ட பாரிவார மூல முர்த்திகளுக்கு விஷேட அபிஷேக ஆராதணைகள் இடம் பெற்று பின்னர் 1008 சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் சங்காபிஷேக உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இவ்வாலயத்தில் கடந்த 24.03.2024 அன்று மஹாகும்பாபிஷேக இடம்பெற்று, 48 நாட்களாக மண்டலாபிஷேக உற்சவம் இடம்பெற்று, மஹாகும்பாபிஷேக நிறைவு நாளான அட்சதிருதி நன்னாளில் சங்காபிஷேக உற்சவம் இடம்பெற்றது.

இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்ட னர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்