வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கிரிக்கெட் தொடர்

-யாழ் நிருபர்-

முதல் தடவையாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பி பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இந்த போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன.

இதில் பாடசாலை சார்பாகவும் ஒரு அணி பங்குபற்றியதுடன், பழைய மாணவர்களின் 20 அணிகள் பங்குபற்றின.

24ஆம் திகதியான நேற்றையதினம் 2010 மற்றும் 2014ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் 2014 அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்த போட்டியில் 2014 ஆண்டு அடியை சேர்ந்த ரி.சரவணன் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும், 2010 அணியை சேர்ந்த எஸ்.துசியந்தன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் வட்டுக்கோட்டை, இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமான ப.தர்மகுமாரன் பிரதம அதிதியாக பங்குபற்றியதுடன், கல்லூரியின் அதிபர் திரு.லங்கா பிரதீபன், பழைய மாணவர் சங்கத்தினர், போட்டியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்