வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

வட்சப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு வேகமாக ரியெக்ட் செய்யும் வகையில் புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்சப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரியெக்ட் செய்து வரும் நிலையில், இதை மேலும் எளிமையாக்க மெட்டா நிறுவனம் குறித்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, புதிய அம்சத்தில் வட்சப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்க்கும் போது, பதிலளி (Reply) என்ற அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதன் மூலம் நேரடியாக பதிலளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அதன் அருகிலேயே உள்ள இமோஜிகளைப் பயன்படுத்தி ரியெக்ட் செய்யவும் முடியும்.

இந்த புதிய அம்சத்தினை தற்போது சோதனை அடிப்படையில் மெட்டா நிறுவன பயனர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இது கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்