மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதியில் வடிகான்கள் முறையாக இல்லாமையினால் வெள்ள நிலைமைகளின் போது மாவட்டம் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவதால் வடிகான்கள் அமைத்தல் போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு நிதி ஒதுக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான விடை நேரத்தில் கேள்வி எழுப்பும் போதே அவர் இகனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் வீதிகள் போடப்பட்டுள்ளது எனினும் முறையான வடிகான்கள் அமைக்கப்படவில்லை அதனால் வெள்ள நிலைமைகளின் போது அபாயகரமான சூழ்நிலை காணப்படுகின்றது.
தந்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊழலற்ற நிர்வாகமாக இருக்கும் சிவம் பாக்கியநாதனின் தலைமையிலான மட்டக்களப்பு மாநகர சபைக்கு இந்த வருடம் நிதி ஒதுக்க வேண்டும் என இரா சாணக்கியன் தெரிவித்தார்.