வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்

-யாழ் நிருபர்-

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்கு தொடுவாய் கொக்கு குழாய் கருணாகேணி பிரதேச மக்களினால் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மகாவலி என்னும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து,  எமது   வாழ்வாதாரத்தை பறிக்காதே,  என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்