
லிச்சிப் பழம் நன்மைகள்
🔴கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கக்கூடிய லிச்சி பழம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. மேலும் லிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும். அந்தவகையில் லிச்சி பழம் மூலம் உடலுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
🍒லிச்சி பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.
🍒கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
🍒லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
🍒லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
🍒லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
🍒இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.
🍒லிச்சி அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தை உட்கொள்வதினால், செரிமானம் சீராக நடைபெறும். குறிப்பாக கோடைகாலங்களில் ஏற்படும் வயிற்று கோளாறுகள் போது, இந்த லிச்சி பழத்தை உட்க்கொண்டு வந்தால், அனைத்து வயிற்று கோளாறுகளும், சரியாகிவிடும்.
லிச்சிப் பழம் நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்