ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதல் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், உக்ரைன் படையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு ஏனைய நகரங்களிலிருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லைத்தாண்டி கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இது ஆத்திரமூட்டும் செயற்பாடு என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமர்சித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்