யாழ். மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று புதன் கிழமை காலை வழங்கி வைத்தார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்தொழில் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் , மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்