யாழ். கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்நாளில் ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையாரின் அருளை பெற குறித்த பகுதி பக்தர்கள் பெருந்திரளானோர் வருகைதந்திருந்தனர்.
மேலும் இவ்மகோற்சவ திருவிழாவானது தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.