மோட்டார் சைக்கிள் விபத்து : செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி செக்குடியரசின் ஜனாதிபதி காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை, எனினும் அவரை கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டியுள்ளது, என வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

62 வயதான செக்குடியரசின் ஜனாதிபதி பெட்ரோ பவல், மோட்டர் சைக்கிள் பயணங்களில் ஆர்வம் உள்ளவர்.

கடந்த வருடம் இவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டர் சைக்கிளை செலுத்தியிருந்தார், பின்னர் தன்னுடைய செயலுக்காக பகிரங்கமாக அவர் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்