![மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி](https://minnal24.com/wp-content/uploads/2023/05/மோட்டார்-சைக்கிள்-விபத்துக்குள்ளானதில்-இளைஞன்-பலி-2.jpg)
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி
மொனராகலை தம்பகல்ல பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மாரியாராவ, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்பகல்ல மாரியாராவ பிரதான வீதியின் 7 இலக்க கட்டைப் பகுதியில் மாரியாராவ நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேக கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த நபர் தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்