மூலம் நோய் குணமாக உணவு

மூலம் நோய் குணமாக உணவு

மூலம் நோய் குணமாக உணவு

🟤பலரும் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஓன்று தான் பைல்ஸ். இந்த பைல்ஸ் நோய் எப்படி உருவாகிறது என்றால்இ மலம் துவாரத்தில் மலமானது ரொம்ப கெட்டியாக கடின தன்மையுடன் முக்கி வெளியே போகும்போதுஇ இரத்த நாளங்கள் தளர்வடைவதால் ஏற்படுவதுதான் பைல்ஸ். இத்தகைய பைல்ஸ் நோயை நாம் உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். அத்தகைய உணவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.

❗வெந்தையம் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள். இந்த வெந்தயத்தை மூல நோயினால் தினமும் அவஸ்தைப்படும் நபர்கள் இரவு சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து.  காலை வெறும் வயிற்றில் அந்த நீருடன் வெந்தயத்தை பருகி வந்தால் மூல பிரச்சனை வெகு சீக்கிரம் சரி ஆகும்.

❗பச்சை காய்கறிகளில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. அதே சமயம் இது போன்ற காய்கறிகளில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முள்ளங்கி, டர்னிப் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், மூல நோய் பிரச்சினை தீரும்.

❗மூலம் நோய் உள்ளவர்கள் உங்கள் உணவு முறையில் சின்ன வெங்காயத்தை தினமும் அதிகளவு சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் காலையில் எழுந்த உடன் பல் துலக்கிவிட்டு சிறிதளவு சின்ன வெங்காயத்தை சப்பிட்டுவிட்டு வெந்நீர் குடித்தால் மூல நோய் குணமடையும்.

❗மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் உள்ள பெக்டின் மற்றும் எதிர்ப்பு மாவு சத்து மூல நோய்க்கு மிகவும் நல்லது. பெக்டின் செரிமான மண்டலத்தில் ஜெல்லை உருவாக்குகிறது, அதே சமயம் மாவு சத்து குடல் பாக்டீரியாவுக்கு உணவளிக்கிறது. இந்த கலவை மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும்.

❗மூல நோய் குணமாக  வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக் கூடிய கீரை வகைகளை தவிர்க்க வேண்டும்.

❗மூல நோய் குணமாக உணவில் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலம் இலகுவாக கழிக்க முடியும்.

❗மூல நோய் குணமாக மோரை உணவில் சேர்ப்பதன் மூலம் வயிறு குளிர்மையாகும். மேலும் ரத்தப்போக்கும் படிப்படியாக குறையும்.

❗மூல நோய் குணமாக ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை, நட்சத்திரபழம் போன்றவற்றை உண்ணலாம்.

❗பைல்ஸ் பிரச்சனை உள்ளார்கள் நீராவியில் செய்யப்பட்ட உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ளலாம். இதனால் மலம் கெட்டியாவது தடுக்கப்படும்.

❗மூல நோயின் தாக்கத்தை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். முழு தானியங்களில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் செரிமானத்துக்கு உதவும். மேலும் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் மூல நோயால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கலாம்

மூலம் நோய் குணமாக உணவு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்