முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

🔳இயல்பாகவே கனவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என நம்மில் பலர் நம்புகின்றார்கள். கனவு நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என நம்மில் பலர் நம்புவோம். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அந்தவகையில், உங்களை யாராவது முத்தமிட்டாலோ அல்லது நீங்கள் யாருக்காவது முத்தம் கொடுத்தாலோ என்ன அர்த்தம் என்பதை இங்கே பார்க்கலாம்.

  1. கன்னம் அல்லது நெற்றியில் முத்தமிடுவது போல கனவு வந்தால், உங்களின் துணைவர் உங்களுக்கு உண்மையிலேயே விசுவாசமாகவும் உறுதியாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உங்களை முத்தமிடுபவர் சிறிய விஷயத்திற்கு கூட கடுமையாக உழைப்பவர். அதே போல் கன்னத்தில் முத்தமிடுவதை போல கனவு வந்தால், உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் இரண்டாவது கிடைக்க போகிறது என அர்த்தம். அடிக்கடி அதே கனவு வருகிறது என்றால் நீங்கள் நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருள், வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். அல்லது உங்கள் வாழ்வில் புதிய உறவு வர வாய்ப்புள்ளது.
  2. உங்கள் கனவில் நீங்கள் வேறொருவரின் காதலி அல்லது காதலனை முத்தமிட்டால் உங்கள் நிஜ வாழ்க்கையில் நீங்க ஒரு புதிய உறவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். இருப்பினும் நீங்கள் கனவில் கண்டதைப் பற்றி அடிக்கடி சிந்தித்து, உங்களின் ஒழுக்கமான வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  3. உங்களுக்கு பிடிக்காத நபருக்கு முத்தம் கொடுப்பது போல கனவு நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு முற்றிலும் பிடிக்காத ஒருவரை நீங்கள் கனவில் முத்தமிடுவது போல கனவு கண்டால் இனி வரும் காலங்களில் நீங்கள் செய்ய விரும்பாத இது போன்ற சில வேலைகளை கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
  4. உதட்டில் முத்தம் நீங்கள் உங்கள் கனவில் யாரையாவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் நிஜ வாழ்க்கையில் நீங்கள் உங்கள் உணர்வுகளை இன்னும் நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். நிஜ வாழ்க்கையில் உங்கள் உறவுகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டும்.
  5. யாராவது உங்கள் மூக்கில் முத்தம் கொடுப்பது போல கனவு வந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும் என அர்த்தம். நீங்கள் செய்யும் அல்லது செய்யவிருக்கும் விஷயங்கள் குறித்து பொறுமையாக யோசிக்கவும். நீங்கள் தீர்ந்தது என்று நினைத்த பிரச்னை மீண்டும் உருவாகலாம். செய்யும் வேலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
  6. உங்களுக்கு பிடித்த நபர் கழுத்தில் முத்தம் கொடுப்பது போல கனவு வந்தால், உங்கள் நீண்ட கால ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது என அர்த்தம். அதுமட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என அர்த்தம். மற்றவர்களின் பிரச்னையில் உங்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இதனால், உங்கள் நிம்மதி மேம்படும்.

🔳எப்போது கனவு கண்டால் பலிக்கும் நள்ளிரவு 1 மணிக்குக் கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்து கிடைக்கும். நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனவு கண்டால், அதன் பலன் மூன்று மாதத்தில் கிடைக்கும். அதுவே, அதிகாலையில் உங்களுக்குக் கனவு வந்தால், அது உடனடியாக பலிக்கும் எனக் கனவு சாஸ்திரம் கூறுகிறது.

முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்