மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 பவுண் தங்கம் 201,300 ரூபாவாகவும் 22 கரட் 1 பவுண் தங்கம் 184,550 ரூபாவாகவும், 21 கரட் 1 பவுண் தங்கம் 176,150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை தங்க நகைகளின் விலைகள் மேலே குறிப்பிடப்பட்ட விலைகளில் இருந்து மாற்றம் அடைய கூடும் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்