
மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு: ட்ரம்ப்
ஸ்மார்ட் கைபேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது.
பெரும்பாலான நாடுகள் மீதான அமெரிக்காவின் 10 சதவீத உலகளாவிய வரியிலிருந்தும், மிகப் பெரிய சீன இறக்குமதி வரியிலிருந்தும் சில பொருட்கள் விலக்கப்படும் என்பதை விளக்கும் அறிவிப்பை அமெரிக்க சுங்கம் வெளியிட்டுள்ளது.
மின்னணு சாதனங்களில் பல வகையானவை சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை உயரக்கூடும் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனா மீதான அமெரிக்காவின் வரிகளில் இது முதலாவது குறிப்பிடத்தக்க நிவாரணமாகும்.