மாமா-மருமகன் கட்சிக்கு விசுவாசமான பத்திரிகை எனது சிறப்புரிமைகளை மீறியுள்ளது

 

மாமா-மருமகன் கட்சியின் (ஐ.தே.க) முகவரான டெய்லி மிரர் பத்திரிகை, அண்மையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சந்தரு குமாரசிங்க என்ற இளம் தொழில்முனைரின் பிரச்சினையை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் கூறியதை விசா மோசடி விவகாரத்தை மேலும் எடுத்துச் செல்லாமல் மறந்துவிடுமாறு நான் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது, என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விசா விவகாரத்தை முதலில் பாராளுமன்றத்தில் முன்வைத்தது நானே, அதன் பின்னரே அது வெளிச்சத்துக்கு வந்தது

இந்த விடயத்தில் தான் பல கருத்துக்களை வெளியிட்டுள்ள பின்னணியில், மாமா-மருமகன் கட்சிக்கு நெருக்கமான பத்திரிகை ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறப்புரிமைக் குழுவிற்கு அவர்களை அழைத்து வர வேண்டிய அவசியமில்லை என்றாலும், இவ்வாறான பொய்களை எழுதி ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்,  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

டெய்லி மிரர் பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை,  தனது சிறப்புரிமையை மீறும் செயல் , என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்