மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

அலுத்கெதர பெல்காத்தன்ன மற்றும் பல்லேகம பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 32, 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்