மாடு கட்ட சென்ற 3 மாத கர்பிணி தாய் மரணம்

திருகோணமலை மொரவெவ பகுதியில் இன்று புதன் கிழமை பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாய் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி
(வயது – 23) என்ற மூன்று மாத கற்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாடு கட்டுவதற்காக நேற்று செவ்வாய் கிழமை மாலை சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்