மல்டி மீடியா ரிசேச் அன்ட் டெவெலப்மென்ட் யுனிட்

-அம்பாறை நிருபர்-

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மியோன் முஸ்தபா மல்டிமீடியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எய்ட் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா கலந்துகொண்டு சிறப்பித்தார் .

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்