மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால்

இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி  தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.