மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தில்இ அது இந்த ஆண்டு ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கும். இன்று (14ஆம் திகதி) நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணல்காடு மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிகளில் நண்பகல் 12:10 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்