மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தின் 63வது வித்தியாலய தினம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தின் 63வது வித்தியாலய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து எங்கள் அறிவாலயத்தின் 64 வருட ‘நிறைவின் நிறைவாய்’ என்னும் கருத்தியலை கொண்டு 64வது பாடசாலை தினம்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபர் இ.விஐயகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம உத்தியோகத்தர் ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டு, நடைபவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் நடைபவனியில் பாடசாலையில்  கல்வி கற்ற மாணவர் அனைவரும் ஒரே விதமான மேலாடைகளை அணிந்து சென்றதுடன், பாடசாலையில் தாங்கள் கல்வி கற்ற காலத்தில் தங்கள் பிரிவுகள் நினைவுகளை பதாதைகளில் பொறித்து ஊர்வலமாக நடந்து சென்றதுடன், திருவள்ளுவரின் உருவப் படம் தாங்கிய ஊர்தியும் பாடசாலையின் திறமைகளை வெளிப்படுத்தும்  விடயங்கள் இவ் நடை பவனியில் அமைந்திருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்