கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரியூட்டர் அபேவிக்கிரம தலைமையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி நீதி மன்றத்தினை சுற்றியுள்ள பிரதேசங்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்கள், களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையை சுற்றியுள்ள பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
குறித்த நிகழ்வுகள் அனைத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரியூட்டர் அபேவிக்கிரம தலைமையில் களுவாஞ்சிகுடி சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் இலங்கோ, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.