மட்டக்களப்பில் லொறி குடைசாய்ந்து விபத்து

மட்டக்களப்பு- கல்லாறு பாலத்தில் லொறி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே விற்பனைக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த குறித்த லொறி கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் கோழிகள் வீதிகளில் சிதறி வீழ்ந்துள்ளன.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்