மட்டக்களப்பில் பற்றி எரிந்த லொறி

-கிரான் நிருபர்-

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

கொழும்பில் பொருட்களை ஏற்றிக்கொண்டு காத்தான்குடியை நோக்கி சென்ற லொறியே இவ்வாறு தீ பற்றியது .

லொறியில் எடுத்துச் சென்ற பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்