‘மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்’

மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.

அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு புதுமையடையத் தேவையில்லை என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்கா

எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா ​வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

ஏழு, எட்டு மணிநேரம் மின்சாரம் இன்றி வீட்டுக்குள் இருக்கும் போது, பதாகையை ஏந்திக்கொண்டு, வீதிக்கு இறங்குவதற்கு எனக்கும் எண்ணம் வரும் என்றார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க