Sri Lanka Tamil News Site

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

- Advertisement -

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலாத்துஓயா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் .

- Advertisement -

உயிரிழந்தவர் 40 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், அவர் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த சட்டை மற்றும் வெள்ளை பாவாடை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!