மகனின் கோடரி தாக்குதலில் தந்தை மரணம்

காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் மகனின் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி தந்தை நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச ஜயசிங்க (வயது – 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட மகனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.