பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நபரை கைது செய்ய சுற்றிவளைப்புக்கு சென்ற போதே குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு கதிர்காமம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சொந்தமானது எனவும் இது 4 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்