பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயார் – அலி சப்ரி

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் அஞ்சுவதால் யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு தேவையானவற்றைச் செய்ய நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயாராக இருக்கிறேன் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.