பேருந்து விபத்து : 5 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

இந்தியாவின் – ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெய்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் பாரபதி பாலத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒடிசாவில் இருந்து கொல்கத்தா நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று நேற்று திங்கட்கிழமை இரவு விபத்துக்குள்ளானதாக இந்திய  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்இ 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்