பேருந்து மோதி 67 வயது பெண் பலி

எத்துகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எத்துகல பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எத்துகல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளையிலிருந்து உலப்பனை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று எத்துகல பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பெண் படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்துகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்